மாணவிகளுக்கு சிறுதானிய உணவு தயாரித்தல் போட்டி
வந்தவாசி அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு சிறுதானிய உணவு தயாரித்தல் போட்டி நடந்தது,.
வந்தவாசி
வந்தவாசி அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு சிறுதானிய உணவு தயாரித்தல் போட்டி நடந்தது,.
வந்தவாசி அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் சிறுதானிய உணவு தயாரித்தல் போட்டி நடைபெற்றது. கல்லூரியின் உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்து சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சி.ருக்மணி தலைமை வகித்தார். செயலாளர் எம்.ரமணன் முன்னிலை வகித்தார். கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியை ஈ.எழிலரசி வரவேற்றார்.
ஊட்டச்சத்தான உணவை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் எஸ்.ரமேஷ், கீழ்நெல்லி வேளாண் அறிவியல் மையத் தலைவர் வி.சுரேஷ், அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுனர் டி.மார்கரெட் ஆகியோர் மாணவியருக்கு விளக்கி பேசினர். இதைத் தொடர்ந்து மாணவியர் சிறுதானிய உணவுகளை தயாரித்தனர். தெள்ளார் வட்டார குழந்தைகள் திட்ட அலுவலர் எஸ்.கண்ணகி நடுவராக இருந்து சிறந்த உணவு வகைகளை தேர்வு செய்தார். சிறப்பிடம் பெற்ற மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கல்லூரி நுண்ணுயிரியல் துறை உதவிப் பேராசிரியை கே.வான்மதிச்செல்வி நன்றி கூறினார்.