தமிழகத்தில் சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் இன்று 113 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 145 இல் இருந்து 113 ஆக குறைந்தது. சென்னையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 58இல் இருந்து 81 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 711இல் இருந்து 756 ஆக உயர்ந்துள்ளது. 68 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. இதுவரை மொத்தம் 38,025 பேர் உயிரிழந்தனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.