தமிழகத்தில் சற்று உயர்ந்த தினசரி கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று 144 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2022-06-07 14:25 GMT

சென்னை,

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று புதிதாக 10 ஆயிரத்து 769 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 90 இல் இருந்து 144 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 48 இல் இருந்து 82 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 862 இல் இருந்து 927 ஆக உயர்ந்துள்ளது. 79 பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்து இன்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. இதுவரை 38,025 பேர் உயிரிழந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்