தென்னை மரத்தில் கூடு கட்டியுள்ள தூக்கணாங்குருவிகள்

தென்னை மரத்தில் தூக்கணாங்குருவிகள் கூடு கட்டியுள்ளது.

Update: 2022-07-04 18:56 GMT

பெரும்பாலும் தூக்கணாங்குருவிகள் பனைமரம் மற்றும் கருவேலமரம் உள்ளிட்ட மரங்களில் மட்டுமே அதிகப்படியான அளவில் கூடு கட்டி வாழ்ந்து வருவது வழக்கம். ஆனால் வடகாடு அருகேயுள்ள ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள தென்னை மரம் ஒன்றில் அரியவகை நிகழ்வாக மிக நேர்த்தியான முறையில் கட்டிட கலைஞரை போல தனது இணை குருவிகளின் துணையோடு ஒற்றுமையாக கூடு கட்டி வாழ்ந்து வரும் தூக்கணாங்குருவிகள் காண்போரை கவர்ந்து வருகிறது. மேலும் மற்ற மரங்களை விட தென்னை மரத்தில் தென்னை மட்டைகள் ஒவ்வொன்றாக உதிர்ந்து விடக்கூடிய சூழலில் எவ்வித அச்சமும் இன்றி கூடு கட்டி வாழ்ந்து வரும் தூக்கணாங்குருவிகள் காண்போர் இதயத்தை சுண்டி இழுத்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்