தூக்குப்ேபாட்டு தொழிலாளி தற்கொலை
ராமநாதபுரத்தில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
ராமநாதபுரம் வ.உ.சி.நகரை சேர்ந்தவர் இருளாண்டி மகன் ரவி (வயது 42). இவர் ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அருகே ஒர்க் ஷாப்பில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது வீட்டிற்கு வந்த நபர் ரவியின் மனைவி ஜெயராணி (36) என்பவரிடம் ரவி பணம் வாங்கி கொண்டு ஆட்டோவிற்கு டிங்கர் வேலை பார்த்து தராமல் ஏமாற்றி வருகிறார் என்று கூறி கண்டித்து சென்றாராம். இதுகுறித்து ஜெயராணி கணவரிடம் கேட்டுள்ளார். இதனால் மனம் உடைந்து காணப்பட்ட ரவி வேலைக்கு சென்ற நிலையில் அருகில் இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஜெயராணி அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் நகர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.