பேரூர் ஆதீனம் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு

பேரூர் ஆதீனம் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-10-19 18:45 GMT


பேரூர் ஆதீனம் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பேரூர் ஆதீனம் குறித்து அவதூறு

கோவை பேரூர் ஆதீனமாக மருதாசலம் அடிகளார் உள்ளார். இவர் தமிழக அரசின் கோவில்கள் மேம்பாட்டுக்கான உயர்மட்ட ஆலோசனை குழுவிலும் இடம்பெற்றுள்ளார். இந்த நிலையில் சண்டீகேசுவர நாராயணன் நற்பணி சங்கத்தை சேர்ந்த சுரேஷ்பாபு என்பவர் நேற்று கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் மனு அளித்துள்ளார்.அந்த மனுவில், "பேரூர் ஆதீனம் மருதாசலம் அடிகளார் குறித்து, சிலர் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூகவலைத்தளத்தில் அவதூறு பரப்பி வருகிறார்கள். அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள். இதனால் சைவ, சமய ஆன்மிகவாதிகள், மடாதிபதிகள், மருதாசல அடிகளார் உள்ளிட்டோர் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகியுள்ளோம். எனவே அவதூறு பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

போலீசார் வழக்குப்பதிவு

இதன்பேரில், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பேரூர் ஆதீனம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்