ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.
கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்தில் உணவுப்பொருள் வழங்குதல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. இதற்கு தாசில்தார் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். வட்ட வழங்கல் அலுவலர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் குறித்து விற்பனையாளர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. மேலும், ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் வெளியூர் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு ரேஷன் பொருட்கள் அனுப்பி வைக்க சாத்தியமும் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதில் அரசு அதிகாரிகள், விற்பனையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.