மாணவர்களுக்கு திறனறியும் போட்டிகள்
ஐன்ஸ்டீன் கல்லூரியில் மாணவர்களுக்கு திறனறியும் போட்டிகள் நடந்தது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் ஐன்ஸ்டீன் கல்வி குழுமம் சார்பில், மாணவ-மாணவிகளுக்கு திறனறியும் போட்டிகள் கல்லூரி வளாகத்தில் 2 நாட்கள் நடந்தது. இதில் பேச்சு, கட்டுரை, புகைப்படம் எடுத்தல், பாடல், பேஷன்ஷோ, நடனம், குறும்படம் உள்ளிட்ட 25 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இதில் ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி, ஐன்ஸ்டீன் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்களின் தனித்திறன்களை அறிந்து ஊக்கப்படுத்தும் விதமாக நடத்தப்பட்ட போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி முதுநிலை வணிக நிர்வாகவியல் துறை சார்பில், 'ஐன்ஸ்டீன் மார்ட்' எனும் பல்பொருள் விற்பனை சந்தை நடைபெற்றது. அண்ணா பல்கலைக்கழக தேர்வு மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 2 மாணவ-மாணவிகளுக்கு துறை வாரியாக பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
நிறைவு விழாவுக்கு ஐன்ஸ்டீன் கல்வி குழும நிர்வாக அறங்காவலர் மதிவாணன் தலைமை தாங்கினார். தலைவர் பேராசிரியர் அமுதவாணன், கல்லூரி செயலாளர் பேராசிரியர் எழிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழா ஏற்பாடுகளை ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி முதல்வர் வேலாயுதம், ஐன்ஸ்டீன் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முருகேசன் வழிகாட்டுதலின்படி, கணினி அறிவியல் துறை தலைவர் சுரேஷ் தங்ககிருஷ்ணன், எந்திரவியல் துறைத்தலைவர் சத்திய அருணாசலம், கணித துறை தலைவர் சுந்தர்ராஜன், இயற்பியல் துறைத்தலைவர் குமரன் மற்றும் பேராசியர்கள், மாணவர்கள் செய்து இருந்தனர்.