பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு திறன் போட்டிகள்

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு திறன் போட்டிகள் இன்றும், நாளையும் நடக்கிறது.

Update: 2023-07-05 18:45 GMT

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு திறன் போட்டிகள் இன்றும், நாளையும் நடக்கிறது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

படைப்பாற்றல்

தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே படைப்பாற்றலையும், பேச்சாற்றலையும் வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசுத்தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு இன்று (வியாழக்கிழமை) காலை 9.15 மணிக்கு மயிலாடுதுறை கூறைநாடு கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியிலும், கல்லூரி மாணவர்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக் கல்லூரியிலும் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

பரிசுத்தொகை

கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிக்கு 3 பிரிவுகளில் தனித்தனியே முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.5 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு பயிலக்கூடிய மாணவர்களுக்கு மயிலாடுதுறை முதன்மைக் கல்வி அலுவலகம் வாயிலாகவும், கல்லூரிகளில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு கல்லூரி மண்டல இணை இயக்குநர் வாயிலாகவும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. எனவே ஆர்வம் உள்ள மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்