சிவசுப்பிரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேகம்

கடலூர் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

Update: 2023-02-02 18:45 GMT

சிவசுப்பிரமணிய சுவாமி

கடலூர் புதுவண்டிப்பாளையத்தில் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். அதன்படி இக்கோவிலில் பல்வேறு திருப்பணி வேலைகள் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து இக்கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இதையொட்டி கடந்த 27-ந்தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து அனுக்ஞை, கோ, கஜ பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. அதையடுத்து நவக்கிரக ஹோமம், தன பூஜை, மூர்த்தி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, மிருத்சங்கிரகணம், தீபாராதனை நடைபெற்றது.

யாக சாலை

நேற்று முன்தினம் முதல் கால யாக பூஜை தொடங்கியது. இதில் யாத்ரா தானம், ரக்ஷா பந்தனம், கும்பம் யாக சாலை, யாக மண்டப பூஜை, வேதிகா, யாக பூஜை, ஹோமம் நடந்தது. நேற்று 2-ம் கால யாக பூஜை, முதல் படை வீடு அலங்காரம், பூர்ணாகுதி, தீபாராதனை, மாலையில் 3-ம் கால யாக பூஜையும் நடைபெற்றது.

இன்று (வெள்ளிக்கிழமை) 4-ம் கால யாக பூஜை, 5-ம் கால யாக பூஜை, நாளை (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு 6-ம் கால யாக பூஜை, மாலையில் 7-ம் கால யாக பூஜை, நாடி சந்தானம், திரவியாகுதி, பூர்ணாகுதி நடக்கிறது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலையில் 8-ம் கால யாக பூஜை, கும்ப, யாக பூஜை, யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடக்கிறது.

கும்பாபிஷேகம்

இதில் யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் கலசம் கோவிலை சுற்றி ஊர்வலமாக கொண்டு வரப்படும். தொடர்ந்து கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்கிறார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை செங்குந்தமரபினர், விழாக்குழுவினர், இளைஞர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்