வில்வித்தை போட்டியில் சிவகாசி மாணவர்கள் உலக சாதனை
வில்வித்தை போட்டியில் சிவகாசி மாணவர்கள் உலக சாதனை;
சிவகாசி
கோவையில் 12-வது தென்னிந்திய அளவிலான வில்வித்தை போட்டிகள் நடைபெற்றது. இதில் சிவகாசியில் உள்ள ஒரு தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவி தான்யா, மாணவன் அபிஷேக் ஆகியோர் கலந்து கொண்டனர். 8 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் மாணவி தான்யா ஒரு மணி நேரத்தில் 300 முறை அம்புகள் எய்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். அதேபோல் 6 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவன் அபிஷேக் ஒரு மணி நேரத்திற்குள் 300 அம்புகள் எய்து உலக சாதனை படைத்துள்ளனர். இவர்களை பாராட்டி சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. இந்நிலையில் சாதனை மாணவர்களை சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன் தனது அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டினார். அப்போது மாணவர்களின் பெற்றோர் உடன் இருந்தனர். மாணவர்களின் சாதனை நோபல் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.