சிவகாசி மாணவர்கள் தேர்வு

மாநில அளவிலான அறிவியல் போட்டிக்கு சிவகாசி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-12-06 20:06 GMT

சிவகாசி, 

சிவகாசி அரசன் கணேசன் மாடல் பள்ளியில் 30-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 150 மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது படைப்புகளை அறிவியல் கண்காட்சியில் இடம்பெற செய்தனர். இதில் சிவகாசி லயன்ஸ் பள்ளியில் படிக்கும் 5-ம் வகுப்பு மாணவர்கள் பிரகதீஷ் கண்ணன், சர்வின் ஆகியோர் பனை மரங்களின் முக்கியத்துவம் குறித்து ஆய்வு செய்து தங்களது படைப்புகளை சமர்ப்பித்தனர். இதில் தேர்ச்சி பெற்ற இவர்கள் மாநில அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சியில் தங்களது படைப்புகளை இடம்பெற செய்ய தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சாதனை மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்