சிவகிரி பேரூராட்சி குப்பைக்கிடங்கில் பயங்கர தீ விபத்து

பயங்கர தீ விபத்து

Update: 2022-09-21 19:30 GMT

சிவகிரி பேரூராட்சி குப்பைக்கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து

ஈரோடு மாவட்டம் சிவகிரி பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் சிவகிரி சந்தைமேடு பகுதியில் உள்ள குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அங்கு குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் குப்பைக்கிடங்கில் இருந்து புகை வந்து கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் குப்பைகள் தீப்பிடித்து எரிய தொடங்கியது. மளமளவென பரவிய தீ கொழுந்துவிட்டு எரிந்தது.

தீ அணைக்கப்பட்டது

இதனால் அந்த பகுதியில் புகை மண்டலமாக காணப்பட்டது. உடனே அந்த பகுதியை சேர்ந்தவர் சிவகிரி பேரூராட்சி நிர்வாகத்திற்கும், கொடுமுடி தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து தீயணைப்புவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ½ மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.

எனினும் தொடர்ந்து குப்பையில் இருந்து புகை வந்து கொண்டிருந்தது. இதனால் பொக்லைன் எந்திரம் மூலம் குப்பைகளை கிளறி தண்ணீரை பீய்ச்சியடித்து புகைமூட்டம் கட்டுப்படுததப்பட்டது. மேலும் சம்பவ இடத்துக்கு பேரூராட்சி தலைவர் பிரதீபா, செயல்அலுவலர் கண்ணன் மற்றும் ஊழியர்கள் சென்று பார்வையிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்