ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்

லாலாபேட்டையில் ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.

Update: 2022-12-05 19:04 GMT

வாலாஜா ஒன்றியம், லாலாபேட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் கோகுலன்.‌ இவர் வார்டு உறுப்பினர்களுக்கு எவ்வித தகவல்களையும் தெரிவிக்காமல் தன்னிச்சையாக செயல்படுவதாக கூறப்படுகிறது. அதேபோல, வார்டு மேம்பாட்டிற்காக பணிகளை ஒதுக்க கோரிக்கை வைத்தால் அதை முறையாக பரிசீலனை செய்வதில்லை என வார்டு உறுப்பினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் தலைவரை கண்டித்து துணைத்தலைவர் உள்பட சில வார்டு உறுப்பினர்கள் நேற்று ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அவர்களை சமாதானம் செய்தனர். அதன்பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்