அக்கா இறந்த தூக்கத்தில் தங்கை தூக்குப்போட்டு தற்கொலை
அக்கா இறந்த தூக்கத்தில் தங்கை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள மருவத்தூர் கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாயி. இவரது மகள் பவித்ரா(வயது 21). 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார். திருமணம் ஆகவில்லை. பவித்ராவின் அக்கா, சத்யா ஒதியம் கிராமத்தை சேர்ந்து கனகராஜ் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இறந்துவிட்டார். அக்கா சத்யா இறந்த துக்கம் தாங்காமல் பவித்ரா மனவேதனையில் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று பவித்ரா வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பவித்ராவின் தாய் செல்வி கொடுத்த புகாரின் பேரில் மருவத்துவர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.