சிறுவாச்சூர் துர்க்கை அம்மன் கோவில் தேரோட்டம்

சிறுவாச்சூர் துர்க்கை அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Update: 2022-07-06 22:19 GMT

தலைவாசல்:

துர்க்கை அம்மன் கோவில்

தலைவாசல் அருகே சிறுவாச்சூர் துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் விழா தொடங்கியது. விழாவையொட்டி அம்மன் புஷ்பா அலங்காரத்தில் தினமும் ஊர்வலம் நடந்தது. பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். விழா நாட்களில் சொற்பொழிவு நடந்தது. ஆடு, கோழி பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நேற்று காலை அம்மனுக்கு மஞ்சள் நீர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. பக்தர்கள் அலகு குத்துதல், அங்கபிரதட்சணம், பால்குடம் ஊர்வலம் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களைசெய்தனர்.

தேரோட்டம்

மாலை 3 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. தேர் முக்கிய வீதிகள் வழியாக வந்து மாலை 5 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. தேரோட்டத்தின் போது பக்தர்கள் ஆட்டம் ஆடியும், பாட்டுப்பாடியும் ஊர்வலமாக வந்தனர். வாணவேடிக்கையுடன் தேரோட்டம்நடந்தது.

நிகழ்ச்சியில் அருள் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் ஜெயபிரகாஷ், கிழக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் சண்முகநாதன், கிழக்கு மாவட்ட பொருளாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் தேரோட்டத்தில் புத்தூர், பர்கூர், வேப்பநத்தம், நாககுறிச்சி, மணி விழுந்தான், பட்டுத்துறை, தலைவாசல், காட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தேரோட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்