சென்னை மாநகராட்சியில் விரைவில் வருகிறது ஒரே டிக்கெட் முறை - சட்டப்பேரவையில் அறிவிப்பு!
பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் என 3 விதமான போக்குவரத்திலும் பயணிக்கும் வசதியை கொண்டுவரும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
சென்னை,
இந்தியாவில் முதன்முறையாக செல்போன் செயலி மூலம் இ-டிக்கெட் பெற்று, பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் என 3 விதமான போக்குவரத்திலும் பயணிக்கும் வசதியை ஒருங்கிணைந்த சென்னை பெருநகரப் போக்குவரத்துக் குழுமம் நடைமுறைக்கு கொண்டு வர உள்ளது.
இந்த நிலையில், சென்னையில் இயங்கும் மாநகரப் பேருந்துகள், மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில் போன்ற பொதுப்போக்குவரத்து சேவைகளில் இடையூறு இல்லாத பயணத்தினை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட துறைகளுடன் கலந்தாலோசித்து, ஒருங்கிணைந்த க்யூ.ஆர் பயணச்சீட்டு முறை மற்றும் பயணத்திட்டமிடலுக்கான செயலி, ரூ.15 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.