பத்மநாபபுரம் அரண்மனைக்கு சிங்கப்பூர் மந்திரி வருகை

பத்மநாபபுரம் அரண்மனைக்கு சிங்கப்பூர் மந்திரி வருகை

Update: 2022-12-17 18:45 GMT

தக்கலை,

சிங்கப்பூரில் போக்குவரத்துத்துறை மந்திரியாக இருப்பவர் ஈஸ்வரன். இவர் சென்னையை ேசர்ந்தவர். ஆனால், சிறுவயது முதல் பெற்றோருடன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன்பு மனைவி மற்றும் குடும்பத்தினருடன் குமரி மாவட்டம் வந்தார். இங்கு பல்வேறு பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு வருகிறார்.

நேற்று காலையில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன்பின்பு தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரம் அரண்மனைக்கு குடும்பத்துடன் வந்தார். அங்கு அரண்மனையை சுற்றி பார்வையிட்டார்.

பின்னர் மந்திரி ஈஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

என்னுடைய உறவினர்கள் தமிழகம், கேரளா, மும்பையில் வசித்து வருகிறார்கள். நான் பல முறை இந்தியாவுக்கு வந்துள்ளேன். பத்மநாபபுரம் அரண்மனைக்கு முதல்முறையாக வந்துள்ளேன். அரண்மனை மிகவும் அழகாக உள்ளது. நன்றாக பராமரித்து வருகிறார்கள். சிங்கப்பூருக்கும் தமிழகம் மற்றும் இந்தியாவிற்கும் இடையே நீண்டகால உறவு இருக்கிறது. குறிப்பாக சிங்கப்பூரில் நிறைய தமிழர்கள் இருக்கிறார்கள். இரு நாடுகளுக்கு இடையே ஆழமான தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்