பள்ளி கட்டிடத்தை பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை

பள்ளி கட்டிடத்தை பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை

Update: 2022-11-02 10:22 GMT

பல்லடம்

பல்லடம் அருகே கரைப்புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்துவருகின்றனர். இந்த பள்ளியானது கடந்த 2005-ம் ஆண்டு ரூ.4.50 லட்சம் திட்டநிதியில் பொதுமக்களின் பங்களிப்புடன் தொடங்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2008 -ம் ஆண்டு ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. தற்போது தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி என இரு பிரிவுகளில் வகுப்புக்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் தற்போது வகுப்பறை பற்றாக்குறையால் மாணவர்கள் பாதிபேர் இருக்கையிலும் மீதி பேர் தரையில் அமர்ந்தும் படித்து வருவதாகவும், பள்ளி கட்டிடத்தின் முன்புறத்தில் இடிபாடுகளுடன் கட்டிடம் காணப்படுவதால் மாணவர்கள் அச்சத்துடன் பள்ளிக்கு வந்து செல்வதாகவும் பெற்றோர்கள் கவலையுடன் தெரிவித்தனர். மேலும் சத்துணவு திட்டத்தில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக உள்ளதாகவும் இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கையில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகமும், பள்ளி கல்வித்துறையும் உடனடி நடவடிக்கை எடுத்து பள்ளி கட்டிடத்தை பராமரித்தும், சத்துணவு திட்டத்திற்கு தரமான அரிசி வழங்கவேண்டும். இவ்வாறு கரைப்புதூர் பொதுமக்கள் தெரிவித்தனர்.

--------------

Tags:    

மேலும் செய்திகள்