வெள்ளி பொருட்கள்- மோட்டார் சைக்கிள் திருட்டு

தஞ்சை அருகே ரெட்டிப்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-09-02 19:43 GMT

வல்லம்;

தஞ்சை அருகே ரெட்டிப்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வெள்ளி பொருட்கள்

தஞ்சை அருகே ரெட்டிப்பாளையம் ரோடு ஆண்டாள் நகரை சேர்ந்தவர் சிவஞானம் (வயது70). இவர் தனது வீட்டை பூட்டி விட்டு கடந்த 29-ந் தேதி சிதம்பரத்துக்கு சென்றார். இந்நிலையில் வீட்டுக்கு வந்த சிவஞானம் வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தாா். அப்போது வீட்டின் உள்அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 1,690 கிராம் வெள்ளிப் பொருட்கள், பித்தளைப் பொருட்கள் மற்றும் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

போலீசில் புகாா்

இதுகுறித்து சிவஞானம் கள்ளப்பெரம்பூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். போலீஸ் மோப்ப நாய் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் சிறிது தூரம் ஓடி சென்றது. யாரையும் பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளி பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்