சிவகங்கையில் அ.தி.மு.க.வினர் மவுன ஊர்வலம்

எம்.ஜி.ஆர்.நினைவு நாளையொட்டி சிவகங்கையில் அ.தி.மு.க.வினர் மவுன ஊர்வலம் நடத்தினர்.

Update: 2022-12-24 19:13 GMT

சிவகங்கை,

முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினத்தையொட்டி சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. இதையொட்டி சிவகங்கை அரண்மனை வாசலில் இருந்து அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையிலும் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலையிலும் மவுன ஊர்வலம் தொடங்கியது.

ஊர்வலத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்மணி பாஸ்கரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நாகராஜன், குணசேகரன், ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், செல்வமணி, சிவகங்கை நகர் செயலாளர் என்.எம். ராஜா, எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் இளங்கோவன் மற்றும் நகர் ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஊர்வலம் சிவகங்கை பஸ் நிலையம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலையை அடைந்து முடிந்தது.அங்கு எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

இதேபோல் காளையார்கோவில் கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் சிலுக்கப்பட்டி கிராமத்தில் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு ஒன்றிய செயலாளர் சிவாஜி தலைமையில் ஒன்றிய கவுன்சிலர் பாண்டி கண்ணு, மற்றும் கண்ணன், துரைராஜ், ரஞ்சித், சதீஷ், உள்ளிட்டவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்