மதுவுக்கு எதிராக கையெழுத்து இயக்கம்

நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பில் மதுவுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

Update: 2023-06-12 18:24 GMT

திருப்பத்தூர் மாவட்ட நாம் தமிழர்கட்சி மகளிர் பாசறை சார்பில் மதுவுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் திருப்பத்தூர்- கிருஷ்ணகிரி மெயின் ரோடு ஸ்டேட் வங்கி முன்பு நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சுமதி அன்பழகன் தலைமை வகித்து கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது மதுவினால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்தும், மது போதையால் பெண்கள், குழந்தைகள் பாகுபாடு இன்றி பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதாகவும், மதுரையில் பெண்களுக்கு மட்டும் பிரத்தியோக மதுக்கடையை திறந்த தமிழக அரசை கண்டித்தும் பேசினார். நிகழ்ச்சியில் இணைச் செயலாளர் பரிமளா, துணை செயலாளர் உஷா பழனி உள்பட தொகுதி தலைவர் ராஜா தேசிங்கு, மாவட்ட மகளிர் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு மதுவுக்கு எதிராக பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர். பின்னர் கோரிக்கை மனுவுடன் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்ற படிவங்களை கலெக்டரிடம் வழங்கினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்