ம.தி.மு.க.வினர் கையெழுத்து இயக்கம்

ம.தி.மு.க. சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது;

Update: 2023-06-20 19:16 GMT

சேலம் மாநகர் மாவட்டம.தி.மு.க. சார்பில் தமிழக கவர்னரை நீக்க வலியுறுத்தி பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று ஜனாதிபதிக்கு அனுப்பும் நிகழ்ச்சி நேற்று சேலம் திருவாக்கவுண்டனூர் பகுதியில் தொடங்கியது. மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் டாக்டர் ச.சங்கேஸ்வரன் தலைமை தாங்கி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில் பெண்கள், ஆண்கள் என ஏராளமானவர்கள் கையெழுத்திட்டனர். தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் முன்பு கையெழுத்து இயக்கம் நடத்தினர்.

நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட அவைத்தலைவர் லிபியா சந்திரசேகர், பொருளாளர் மணிகண்டன், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.விஜயகுமார், மாவட்ட துணை செயலாளர்கள் மாரியம்மாள், ரஜினிகாந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கையெழுத்து இயக்கம் குறித்து மாநகர் செயலாளர் டாக்டர் ச.சங்கேஸ்வரன் கூறுகையில், இந்த கையெழுத்து இயக்கம் ஒரு மாதம் நடத்தப்படும். பின்னர் ஜூலை மாதம் 20-ந் தேதிக்குள் பொதுமக்களிடம் வாங்கப்பட்ட கையெழுத்து பிரதிகள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்