கல்விக்கடனை ரத்து செய்யக்கோரி கையெழுத்து பிரசாரம்
திருவாரூர் பழைய பஸ்நிலையம் முன்பு கல்விக்கடனை ரத்து செய்யக்கோரி கையெழுத்து பிரசாரம்
கல்விக்கடன்களை ரத்து செய்யக்கோரி காந்திய காமராஜர் மக்கள் இயக்கம் சார்பில் திருவாரூர் பழைய பஸ்நிலையம் முன்பு கையெழுத்து பிரசாரம் நடந்தது. இந்த பிரசாரத்திற்கு மாநில செயலாளர் தங்க.தமிழழகன் தலைமை தாங்கினார். பிரசாரத்தில், பட்டதாரிகள் வாங்கிய கல்விக்கடனுக்கு எந்த சூழ்நிலையிலும் நோட்டீஸ் கொடுத்து கோர்ட்டுக்கு வரசெய்வதை தவிர்க்க வேண்டும். பட்டதாரிகள் வாங்கிய கல்விக்கடனுக்கு அவர்கள் வீட்டிற்கு சென்று தொந்தரவு செய்யக்கூடாது. படித்த பட்டதாரிகளுக்கு மத்திய அரசு கருணை காட்ட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள பட்டதாரிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இந்த பிரசாரத்தில் காந்திய காமராஜர் மக்கள் இயக்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.