சிக்னல் கோளாறு: சென்னை கடற்கரை-தாம்பரம் புறநகர் மின்சார ரெயில்கள் தாமதம்

சென்னை கடற்கரை-தாம்பரம் மார்க்கமாக செல்லும் புறநகர் மின்சார ரெயில்கள் சேவையில் அரை மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.

Update: 2022-09-30 03:19 GMT

சென்னை,

சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு இடையே தினமும் 300 மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றது. மின்சார ரெயில்களில் அலுவலகம் செல்லக்கூடிய ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், கூலி வேலை செய்யக்கூடியவர்கள் அதிகளவு பயணம் செய்கின்றனர்.

அதிகமான மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டாலும் காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில் கூட்ட நெரிசல் நீடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை கடற்கரை-தாம்பரம் மார்க்கமாக செல்லும் புறநகர் மின்சார ரெயில்கள் சேவையில் அரை மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. சிக்னல் கோளாறு காரணமாக ஏற்பட்ட தாமதத்தால் புறநகர் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

பின்னர், சிக்னல் கோளாறு சரிசெய்யப்பட்ட நிலையில் புறநகர் மின்சார ரெயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்