ஊஞ்சலூர் அருகே நார் மில்லை கிராமமக்கள் முற்றுகை

ஊஞ்சலூர் அருகே நார் மில்லை கிராமமக்கள் முற்றுகையிட்டனா்.

Update: 2022-06-24 21:49 GMT

ஊஞ்சலூர்:

ஊஞ்சலூர் அருகே இச்சிப்பாளையத்தில் தனியார் தேங்காய் நார் மில் சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த மில் செயல்பட்டால் சுற்றுச்சூழல், நிலத்தடி நீர், விவசாய நிலங்கள் பாதிப்பு ஏற்படும் என இந்த பகுதியை சேர்ந்த கிராமமக்கள் சிறப்பு கிராமசபை கூட்டம் கூட்டி இந்த நார்மில்லுக்கு அனுமதி தரக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றி கம்பெனி செயல்படுவதை தடுத்து நிறுத்தி வைத்து இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை நார்மில் வளாகத்துக்குள் புதிய மின் கம்பத்தை மின்வாரிய ஊழியர்கள் நட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் இச்சிப்பாளையம் கிராம மக்கள் அங்கு சென்று நார்மில்லினை முற்றுகையிட்டு மின் கம்பம் நட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அங்கு சென்று சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறும்போது, 'பிரச்சினைக்குரிய இடத்தில் மின் கம்பம் நட்டது தவறு. உடனடியாக அதை அகற்ற வேண்டும்' என்றனர்.

உடனே மின்வாரிய ஊழியர்களும் அந்த மின் கம்பத்தை பிடுங்கி எடுத்து சென்றனர். அதைத்தொடர்ந்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்