கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2023-05-10 18:45 GMT

கடலாடி அருகே உள்ளது டி.கிருஷ்ணாபுரம். இந்த ஊரை சேர்ந்த ஏராளமான ஆண்களும், பெண்களும் நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் ஊரில் தனிச்சியம் ஊராட்சி மன்ற கட்டிடம் கடந்த 1986-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. பழுதடைந்த காரணத்தினால் மீண்டும் புதிய கட்டிடம் கட்டித்தரக்கோரி நடவடிக்கை எடுத்தோம். இதன் பயனாக தற்போது புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தினை ஊராட்சி மன்ற தலைவர் தனிச்சியம் கிராமத்தில் கட்ட நடவடிக்கை எடுத்துள்ளார். கடந்த 37 ஆண்டுகளாக எங்கள் ஊரில் செயல்பட்டு வந்த கட்டிடத்தினை தற்போது தனிச்சியம் கிராமத்திற்கு மாற்றுவது கண்டனத்திற்குரியது. அதிக மக்கள் தொகை கொண்ட டி.கிருஷ்ணாபுரம் பகுதியில் தொடர்ந்து தனிச்சியம் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்