அலுவலர்களை முற்றுகையிட்ட பொதுமக்கள்

தேன்கனிக்கோட்டையில் மின்தகன மேடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அலுவலர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.;

Update: 2022-07-02 16:57 GMT

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட சிங்காரத்தோப்பு பகுதியில் மின் தகன மேடை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு சாப்ரானபள்ளி, பூதக்கோட்டை மற்றும் அத்திக்கோட்டை ஆகிய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அலுவலர்கள் மின் தகன மேடை அமைக்க பொக்லைன் எந்திரங்களுடன் சென்றனர். இதையறிந்த பொதுமக்கள் அலுவலர்களை முற்றுகையிட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் குருநாதன், பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது கிராம பகுதியில் மின் தகன மேடை அமைக்க கூடாது தெரிவித்தனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்