சித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு

பட்டுக்கோட்டை சித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு நடந்தது.;

Update: 2023-09-03 20:28 GMT

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை நகர் சவுக்கண்டித்தெரு சித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி முதல் நாள் கணபதி ஹோமம், லட்சுமி பூஜை, கோ பூஜையுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து கடங்கள் புறப்பாடாகி கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. பின்னர் மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்..பின்னர் அன்னதானம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை சவுக்கண்டித்தெரு மக்கள் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்