வடலூரில் ரவுடிக்கு அரிவாள் வெட்டு

வடலூரில் ரவுடியை அரிவாளால் வெட்டிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-06-30 16:24 GMT

வடலூர், 

வடலூர் அன்னை சத்யா வீதியை சேர்ந்தவர் மணி மகன் அருள்பாண்டியன் (வயது 34). ரவுடியான இவர் மீது வடலூர் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் வடலூர் ரெயில்வே கேட் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் அருள்பாண்டியன் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சேராக்குப்பத்தை சேர்ந்த விசுவநாதன் மகன் பாலாஜி மற்றும் 4 பேர் கொண்ட கும்பல் திடீரென அருள்பாண்டியனை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. மேலும் தாங்கள் கொண்டு வந்த இரும்பு குழாய்களால் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாாின்பேரில் பாலாஜி உள்பட 5 பேர் மீது வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்