தூத்துக்குடியில் கிணறு உறை தயாரிப்பவருக்கு அரிவாள் வெட்டு

தூத்துக்குடியில் கிணறு உறை தயாரிப்பவர் அரிவாளால் வெட்டப்பட்டார்.

Update: 2022-06-05 15:52 GMT

தூத்துக்குடி:

தூத்துக்குடி பாரதிநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (வயது 45). இவர் கிணறுகளுக்கான சிமெண்ட் உரை தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரிடம் வள்ளிநாயகபுரத்தை சேர்ந்த மாரிமுத்து (20) என்பவர் வேலைபார்த்து உள்ளார். அவரை சில நாட்களுக்கு முன்பு வேலையில் இருந்து நிறுத்தி விட்டாராம். இந்த நிலையில் மாரிமுத்து பிரையண்ட்நகர் 7-வது தெருவில் கிணறு தோண்டும் பணிக்கு சென்ற போது, மண் சரிந்து விழுந்து இறந்தார்.

இதனால் மாரிமுத்தின் நண்பர்கள் வினோத் உள்ளிட்ட 3 பேரும் அமிர்தலிங்கம் மீது ஆத்திரம் அடைந்து உள்ளனர். அவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் அமிர்தலிங்கத்தின் வீட்டுக்கு சென்று அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்று விட்டார்களாம். இதில் காயம் அடைந்த அமிர்தலிங்கம் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்