விவசாயிக்கு அரிவாள் வெட்டு
தேனியில் விவசாயியை அரிவாளாலால் வெட்டிய 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
தேனி விசுவதாஸ் நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 54). விவசாயி. இவரது வீட்டின் அருகே வசிப்பவர் ஜெயகுரு. இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜெயகுரு மற்றும் அவரது உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த குரு, சக்தி கணேஷ் உள்பட 10 பேர் சேர்ந்து கண்ணனை தகாத வார்த்தையால் பேசியுள்ளனர். அப்போது ஜெயகுரு அரிவாளால் கண்ணனை வெட்டினார். மேலும் சக்தி கணேஷ் கத்தியால் அவரை தாக்கினார்.
அப்போது இதை தடுக்க வந்த ஜெயகுருவின் மனைவி சண்முகபிரியாவையும் தாக்கியுள்ளனர். இதையடுத்து காயமடைந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் ேசர்த்தனர். இதுகுறித்து ஜெயகுரு, குரு, சக்தி கணேஷ் உள்பட 10 பேர் மீது தேனி போலீஸ் இன்ஸ்பெக்டர் மாயா ராஜலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.