கழுகுமலை அருகே தம்பதிக்கு அரிவாள் வெட்டு

கழுகுமலை அருகே தம்பதிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

Update: 2023-09-12 18:45 GMT

கழுகுமலை:

கழுகுமலை அருகே உள்ள முக்கூட்டுமலை மேலத்தெருவை சேர்ந்த அண்ணாமலை மகன் பாலசுப்பிரமணியன்(வயது 40). தொழிலாளி. இவருக்கும், உறவினரான அதே பகுதியை சேர்ந்த குருசாமி மகன் பாலசுப்பிரமணியன் (55) என்பவருக்கும் சொத்து பிரச்சினையில் முன்விரோதம் இருந்துள்ளது. இப்பிரச்சினை தொடர்பாக நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் அ.பாலசுப்பிரமணியனை, கு.பாலசுப்பிரமணியன் அரிவாளால் வெட்டியுள்ளார். இதை தடுக்க முயன்ற அவரது மனைவி மாரீஷ்வரிக்கும் (35) அரிவாள் வெட்டு விழுந்தது. அவர்களை உறவினர்கள் மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் கழுகுமலை சப்- இன்ஸ்பெக்டர் குருசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். அதேபோல் அந்த தம்பதியிர் தன்னை தாக்கியதாக கூறி, கு.பாலசுப்பிரமணியனும் அரசு ஆஸ்பத்திரியில் ேசர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்தும் கழுகுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்