கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

Update: 2023-07-03 11:52 GMT

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் இந்திய அணுமின் கழகம் நிர்வகிக்கும் சென்னை அணுமின் நிலையம் மற்றும் இந்திரா காந்தி அணுஆராய்ச்சி மையம் போன்றவை இயங்கி வருகிறது. இந்த நிலையில் அணுமின் நிலையத்தில் தொழில்நுட்ப பழுது பராமரிப்பு காரணமாக 2-வது அலகில் மின் உற்பத்தி 45 நாட்களுக்கு நிறுத்தப்படுகிறது. மின் உற்பத்திக்காக 2 அலகுகளில் தலா 220 மெகாவாட் மின்திறனில் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், முதல் அலகின் வினைகலன் பழுதடைந்து தற்போது வரை இயங்காமல் முடங்கி உள்ளது. 2-வது அலகு மட்டுமே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பழுது பராமரிப்பு பணி காரணமாக 45 நாட்களுக்கு 2-வது அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்படுவதாகவும், பராமரிப்பு பணி முடிந்தவுடன் வழக்கம்போல் 2-வது அலகில் மின் உற்பத்தி 1½ மாதங்களுக்கு பிறகு தொடங்கும் என்றும் கல்பாக்கம் அணுமின் நிலையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்