பொம்மிடி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Update: 2022-11-20 18:45 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

கடத்தூர் கோட்ட செயற்பொறியாளர் ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பொம்மிடி, வே.முத்தம்பட்டி, கே.என்.புதூர் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பொம்மிடி, அஜ்ஜம்பட்டி, பி.பள்ளிப்பட்டி, வாசிகவுண்டனூர், பொ.துருஞ்சிப்பட்டி, நடுர், ஒட்டுப்பட்டி, பில்பருத்தி, கேத்துரெட்டிபட்டி, நத்தமேடு, வேப்பிலைப்பட்டி, வே.முத்தம்பட்டி, கே.மோரூர், கண்ணம்பாடி, கே.என்.புதூர், வத்தல்மலை, கொண்டகர அள்ளி, ரேகடஅள்ளி, திப்பிரெட்டிஅள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்