தாளவாடி அருகே சூறாவளிக்காற்றுடன் மழை:300 வாழைகள் முறிந்து சேதம்

வாழைகள்

Update: 2023-04-01 20:47 GMT

தாளவாடி அருகே சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் 300 வாழைகள் முறிந்து சேதம் ஆனது.

சூறாவளிக்காற்று

தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வந்தது. இந்த நிலையில் தாளவாடி அருகே உள்ள கெட்டவாடி, ஜீர்கள்ளி, கணேசபுரம், தொட்டமுதிகரை, திம்பம், ஆசனூர் ஆகிய பகுதியில் நேற்று மதியம் 2 மணி அளவில் வானில் கருமேகங்கள் திரண்டன. பின்னர் மழை தூற தொடங்கியது. இதையடுத்து சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது.

வாழைகள் சேதம்

சூறாவளிக்காற்றால் கெட்டவாடி பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 300 வாழைகள் முறிந்து விழுந்து சேதம் ஆனது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியபோது, 'குலை தள்ளி அறுவடை செய்யும் நேரத்தில் சூறாவளிக்காற்றால் வாழைகள் முறிந்துவிட்டன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து பார்த்து உரிய இழப்பீடு பெற்றுத்தரவேண்டும'் என்றார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்