குளித்தலை பகுதியில் சாரல் மழை

குளித்தலை பகுதியில் சாரல் மழை பெய்தது.

Update: 2022-05-30 18:35 GMT

குளித்தலை,

குளித்தலை பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது. அதிக வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வந்தனர். இந்தநிலையில் மாலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இதனால் சற்று குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்