காட்சிப்பொருளான பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரம்; சிக்னல் கிடைக்காமல் வாடிக்கையாளர்கள் தவிப்பு

ஆண்டிப்பட்டி அருகே காட்சிப்பொருளான பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரத்தால் சிக்னல் கிடைக்காமல் வாடிக்கையாளர்கள் தவித்து வருகின்றனர்.

Update: 2023-08-09 21:00 GMT

ஆண்டிப்பட்டி அருகே திம்மரசநாயக்கனூரில் பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரம் உள்ளது. இந்த கோபுரம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வந்தது. இதன் சேவையை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாணவ-மாணவிகள், வாகன சோதனை சாவடியில் பணியாற்றி வரும் போலீசார் உள்ளிட்ட வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திம்மரசநாயக்கனூரில் உள்ள பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுர பயன்பாடு திடீரென்று நிறுத்தப்பட்டது. மேலும் செல்போன் கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த உபகரணங்களை அதிகாரிகள் அகற்றினர். இதனால் கடந்த 2 ஆண்டுகளாக திம்மரசநாயக்கனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் சிக்னல் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் பலரும் தனியார் செல்போன் நிறுவன சேவைக்கு மாறிவிட்டனர். எனவே காட்சிப்பொருளான செல்போன் கோபுரத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து பி.எஸ்.என்.எல். அதிகாரிகளிடம் கேட்டபோது, திம்மரசநாயக்கனூர் செல்போன் கோபுரத்தின் மூலம் பயன்பாடு குறைந்ததால் அங்கு செல்போன் கோபுரத்தின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது தேனி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரங்களில் 4ஜி சேவை தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 4ஜி சேவை தொடங்கும் போது திம்மரசநாயக்கனூர் செல்போன் கோபுரத்தையும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்