தேர்வு முடிவு வெளியான சற்று நேரத்தில் பிளஸ்-2 மாணவி திடீர் மாயம்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தேர்வு முடிவு வெளியான சற்று நேரத்தில் பிளஸ்-2 மாணவி திடீரென மாயமானார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தை சேர்ந்தவர் அய்யனார். இவருடைய மகள் பிரபாதேவி (வயது16). இவர் பிளஸ்-2 தேர்வை எழுதி இருந்தார்.
தேர்வு முடிவுகள் நேற்றுமுன்தினம் வெளியானது. இதில் 419 மதிப்பெண்கள் பெற்று அவர் தேர்ச்சி பெற்றார். இந்தநிலையில் அவர் வெளியே சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்ைல. இதுகுறித்து அய்யனார் அளித்த புகாரின் பேரில் மம்சாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மாயமான மாணவியை தேடிவருகின்றனர்.