ஆசிரியர்களுக்கு குறுவள மைய பயிற்சி

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கற்பித்தல் குறித்து ஆசிரியர்களுக்கு குறுவள மைய பயிற்சி நடந்தது.

Update: 2023-07-23 18:45 GMT

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களைக் கண்டறிதல் முகாம் மற்றும் அவர்களுக்கான உள்ளடங்கிய கல்வி குறுவள மைய பயிற்சி நடந்தது. இந்த பயிற்சியை இணை இயக்குனர் (கல்வித்துறை) குமார் மற்றும் திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பயிற்சியின் நோக்கங்களான மாற்றுத்திறன் குழந்தைகளை கண்டறிதல், அவர்களை பொதுப்பள்ளியில் மற்ற மாணவர்களோடு இணைத்து கல்வி அளிப்பதின் அவசியம் குறித்தும், மாற்றுத்திறன் மாணவர்களை ஆசிரியர்கள் தாய்மை உள்ளத்தோடு அரவணைத்து அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு வழிகாட்டுபவராக செயலாற்றிட வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். இதை தொடர்ந்து மாணவர்களின் வாசிப்பு இயக்கத்தை மேம்படுத்துவதற்காக 53 வகையான புத்தகங்களை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கினர். இந்த ஆய்வின் போது மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் (தொடக்கநிலை) பாலசுப்ரமணியன், வட்டார கல்வி அலுவலர் சம்பத், தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சத்யா மற்றும் சிறப்பாசிரியர் அருண் பாலாஜி, ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்