குறும்படம் ஒளிபரப்பு

கோவில்பட்டியில் சினிமா தியேட்டரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது

Update: 2022-08-21 17:16 GMT

கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பில், போதை ஒழிப்பை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு குறும்படம் தயாரிக்கப்பட்டு, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள தியேட்டர்களில் திரையிடப்பட்டு வருகிறது. சுமார் 20 நிமிடம் வரை ஓடும் இந்த குறும்படத்தை, தியேட்டர்களில் திரைப்படம் திரையிடுவதற்கு முன் திரையிடப்படும்.

கோவில்பட்டி அண்ணா பஸ்நிலையம் எதிரே உள்ள லட்சுமி தியேட்டரில், காவல் துறை சார்பில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது. நிகழ்ச்சியை கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் தொடங்கி வைத்து, பொதுமக்களோடு அமர்ந்து குறும்படம் பார்த்தார். தியேட்டருக்கு வந்த பொதுமக்களிடம் போதை ஒழிப்பு குறித்து பேசினார். குறும்படத்தின் இறுதியில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், போதை ஒழிப்பு குறித்து சில நிமிடங்கள் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த், சப்-இன்ஸ்பெக்டர் அரிக்கண்ணன் மற்றும் காவல் துறையினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்