கடைகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்

கோவையில் வருகிற 31-ந் தேதி முழு அடைப்பு அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், அன்று திறக்கும் கடைகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தி உள்ளது.

Update: 2022-10-28 18:45 GMT

கோவையில் வருகிற 31-ந் தேதி முழு அடைப்பு அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், அன்று திறக்கும் கடைகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தி உள்ளது.

போலீஸ் கமிஷனரிடம் மனு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோவை மண்டல தலைவர் சூலூர் டி.ஆர்.சந்திரசேகரன் தலைமையில் மாவட்ட தலைவர் ஜி.இருதயராஜா, மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.கணே சன், மற்றும் பாக்கியநாதன், காமராஜ், சண்முகநாதன் உள்பட பலர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

கோவையில் வருகிற 31-ந் தேதி கடைகள் அடைப்பு என அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இந்த போராட்டம் வணிகர் களையும், பொதுமக்களையும் மிகவும் பாதிக்கும்.

கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு குறித்து போலீசார் துரித நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு வலியுறுத்துகிறது.

கடைகளுக்கு பாதுகாப்பு

பொதுவான போராட்டம் என்றால் வணிகர் சங்க பேரமைப்பு முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருக்கிறது.

எந்த போராட் டமாக இருந்தாலும் வணிகர் சங்க அமைப்புகளையும் கலந்து பேசி முடிவு செய்து தேதி அறிவிக்க வேண்டும் என்பதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு உறுதியாக இருக்கிறது.

எங்களிடம் கலந்து பேசி போராட்டத்தை அறிவிக்க வில்லை என்பதால் 31-ந் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தவர்கள் இந்த போராட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

நாங்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை. எனவே முழு அடைப்பு போராட்டத்தின் போது கோவையில் திறந்து இருக்கும் கடைகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்