கள்ளக்குறிச்சியில்வாடகை செலுத்தாததால் 12 கடைகளுக்கு சீல்நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
கள்ளக்குறிச்சியில் வாடகை செலுத்தாததால் 12 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனா்.;
கள்ளக்குறிச்சியில் தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான 253 கடைகள் உள்ளது. இதில் கடை வாடகை பாக்கி செலுத்தாதவர்கள் உடனடிாய செலுத்துமாறு நகராட்சி நிா்வாகம் கடந்த 5 மாதங்களாக அறிவுறுத்தி வருகிறது. இருப்பினும் ரூ.50 ஆயித்துக்கும் மேல் கடை வாடகை பாக்கி வைத்து இருப்பவர்கள் 53 பேர் வரைக்கும் உள்ளனர். இந்நிலையில் நேற்று நகராட்சி ஆணையர் குமரன் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் வாடகை பாக்கி செலுத்தாதவர்களில் 12 பேரின் கடைகளுக்கு பூட்டி சீல் வைத்தனர்.
இதுபோன்று பஸ் நிலையத்தில் வாடகை பாக்கி வைத்துள்ள கடைகாரர்களுக்கு உடனடியாக பாக்கி செலுத்த வேண்டும். இல்லையென்றால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என ஆணையர் குமரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.