தேவகோட்டை நகராட்சியில் வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு 'சீல்'
தேவகோட்டை நகராட்சியில் வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
தேவகோட்டை
தேவகோட்டை நகராட்சிக்கு சொந்தமான 151 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்த கடைகளின் மூலம் ரூ.2 கோடியே 48 லட்சத்து 95 ஆயிரம் வாடகை பாக்கி உள்ளது. இந்த வாடகை பாக்கியை வசூல் செய்ய நகராட்சி ஆணையாளர் திருமால் செல்வன் தலைமையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் மேலாளர் ராஜேஷ் மற்றும் வருவாய் ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் மேற்பார்வையில் கடந்த 2 நாட்களாக வாடகை செலுத்தாத கடைகளை நகராட்சி ஊழியர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைத்து வருகின்றனர். சீல் வைக்கப்பட்டதை தொடர்ந்து சில கடையின் உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து வாடகையை செலுத்தி வருகின்றனர்.