புகையிலை பொருட்கள் விற்ற 4 கடைகளுக்கு `சீல்'

புகையிலை பொருட்கள் விற்ற 4 கடைகளுக்கு `சீல்' வைக்கப்பட்டது.

Update: 2022-06-16 18:34 GMT

விருதுநகர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் குட்கா விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு அருகே உள்ள கடைகள் ஆகியவற்றில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது 15 நபர்களிடமிருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இக்கடைகள் மீது பொது சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உரிமத்தை ரத்து செய்யவும், கடைகளுக்கு சீல் வைக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இதனை தொடர்ந்து விருதுநகர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த கார்த்தீஸ்வரி, அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டையை சேர்ந்த ராஜபாண்டி, திருநகரை சேர்ந்த திருமணி தங்கம் மற்றும் பாலையம்பட்டியை சேர்ந்த முருகன் ஆகிய 4 பேரின் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மாவட்டத்தில் இதுபோன்று தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் சூப்பிரண்டு மனோகர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்