தீபாவளிக்காக வணிக வளாகங்களில் நடத்தப்பட்ட சோதனை - வெளியான அதிர்ச்சி தகவல்

சென்னை கோட்ட அலுவலர்களால் சௌகார்பேட்டை, தி.நகர் உள்ளிட்ட இடங்களில் இயங்கும் 52 வணிகத் தலங்களில், திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.;

Update: 2022-10-21 09:50 GMT

சென்னை,

பண்டிகை காலங்களில் வணிகர்கள் பட்டியலின்றி வணிகம் மற்றும் வரி ஏய்ப்பு செய்த புகார்களை தொடர்ந்து, சென்னை கோட்ட அலுவலர்களால் சௌகார்பேட்டை, தி.நகர் உள்ளிட்ட இடங்களில் இயங்கும் 52 வணிகத் தலங்களில், கடந்த அக்டோபர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆய்வின் போது, வரி ஏய்ப்பு செய்தமைக்காகவும், உள்ளீட்டு வரி தவறாக பயன்படுத்தியமைக்காகவும், 25 வணிகர்களிடமிருந்து1 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, மேலும் சில வணிகர்களின் கணக்குகளை ஆய்வு செய்து, நோட்டீஸ் வழங்கப்பட்டு, மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்