மணப்பாறை:
வளநாடு அருகே உள்ள டி.பொருவாய் பகுதியில் மலர்விழி(வயது 29) என்பவர் தையல் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடையை பூட்டிவிட்டு சென்ற நிலையில் மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது கடையின் பின்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கடையில் இருந்த ரூ.38 ஆயிரத்து 400 மற்றும் ஒரு மடிக்கணினி திருட்டு போயிருந்தது. இது குறித்து அவர் அளித்த புகாரின்பேரில் வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.