மோட்டார் சைக்கிள் மோதி கடைக்காரர் பலி
மோட்டார் சைக்கிள் மோதி கடைக்காரர் பலியானார்
திருமங்கலம்,
திருமங்கலம் அருகே கப்பலூர் அடுத்த சொக்கநாதன்பட்டி பகுதியை சேர்ந்தவர் அலியார் (வயது43). இவர் கப்பலூரில் பல சரக்கு கடை வைத்து உள்ளார். சைக்கிளில் கப்பலூரில் இருந்து சொக்கநாதன் பட்டிக்கு சென்றபோது மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் உயிரிழந்தார். இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.