கடையில் ரூ.3½ லட்சம் திருட்டு

நாகர்கோவிலில் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் கடையில் ரூ.3½ லட்சத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2023-09-03 18:45 GMT

நாகர்கோவில், 

நாகர்கோவிலில் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் கடையில் ரூ.3½ லட்சத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

்லாக்கரில் இருந்த பணம்

நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் இருந்து ஆசாரிபள்ளம் செல்லும் சாலையில் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் கடை உள்ளது. இந்த கடையின் மேலாளராக தெங்கம்புதூர் சர்ச் தெருவை சேர்ந்த இம்மானுவேல் (வயது 39) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் இரவு வியாபாரம் முடித்து விட்டு கடையை பூட்டி விட்டு சென்றார். அப்போது கடையில் இருந்த லாக்கரில் ரூ.3,46,300-ஐ வைத்திருந்தார்.

மறுநாள் காலையில் ஊழியர்கள் கடையை திறந்தனர். தொடர்ந்து லாக்கரை திறந்து பார்த்த போது அதில் பணம் இல்லை. பணத்தை கடை முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை.

ரூ.3½ லட்சம் திருட்டு

இதுகுறித்து நேசமணி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கடை முழுவதும் சோதனை செய்தனர். அப்போது கடையின் மேல் தளத்தில் உள்ள கதவு திறக்கப்பட்டு இருந்தது.

இதனால் மர்ம நபர்கள் மேல் தளத்தின் கதவை திறந்து உள்ளே புகுந்து லாக்கரை திறந்து அதில் இருந்த பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்