கர்நாடக அரசை கண்டித்து சீர்காழியில் கடையடடைப்பு
காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்து சீர்காழியில் கடையடடைப்பு போராட்டன் நடந்தது.;
சீர்காழி:
இதேபோல் சீர்காழி பகுதியில் நடைபெற்ற கடையடைப்பு போரட்டத்தில் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், ரெயில்வே ரோடு, சிதம்பரம் சாலை, தென்பாதி, கொள்ளிடம் முக்கூட்டு ஈசானிய தெரு, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டீக்கடை, மளிகைக்கடை, தேனீர் கடை உணவு விடுதி உள்ளிட்ட பெரும்பான்மையான கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் நேற்று குறைவான பஸ்கள் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதைப்போல் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி பகுதிகளில் உள்ள பெரும்பான்மையான கடைகள் அடைக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.